பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

拿

152 மு. பரமசிவம் :

விந்தனின் பசிகோவிந்தம் புத்தகத்துக்கு இடது சாரி இலக்கிய வாதிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அனைத்துக்கும் மேலாக மூதறிஞர் இராஜாஜியிடம் உங்களுக்கு விந்தனைத் தெரியுமா? என்று யாராவது கேட்டால் அதோ, இருக்கிறாரே அவர் தானே? என்று அலமாரியில் உள்ள பசிகோவிந்தம் புத்தகத்தைக் காட்டுவாராம். அந்த அளவு ராஜாஜியை பாதித்த நூல் பசிகோவிந்தம்.

விந்தன் தம் கடைசி காலத்தில் தம் மனத்தில் நீண்ட காலமாகப் பதிவு செய்து வைத்திருந்த கருத்துக்கள் 'பெரியார் ஆத்திசூடி" என்ற கவிதை நூலை வெளியிட்டார்.

இந்த நூலுக்கான ஊற்று குமுதம் பத்திரிகையில் கிருபானந்த வாரியார் வாரியார் விருந்து' என்று எழுதிய கட்டுரையே ஆகும்.

'வாரியார் விருந்து என்ற கட்டுரையைப் படிக்கும் போதெல்லாம் விந்தன், பெரியார் மருந்து என்று ஒரு நூலை எழுதவேண்டும் என்று சொல்லுவார். அந்த நூல்தான் பெரியார் ஆத்திசூடி.'

தமிழ்க் கவிதைத் துறையில் விந்தனின் பணி சிறிதுதான் எனினும் அதன் வீச்சும் வேகமும் இன்றும் பலரைக் குதூகலிக்கவும் குமுறவும் செய்து கொண்டிருக்கின்றன.

★ ★ ★