பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 மு. பரமசிவம் *

ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதர் திரையும் வாழ்வும் 'சரா சரங்கள் வரும் சுழன்றே!’

ம்ேபது நாட்கள் ஓடும் படத்தை இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள்; நூறு நாட்கள் ஒட்டப்படும் படத்தையும் இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள். ஆயிரம் நாட்கள் ஒரே தியேட்டரில், ஒரே மூச்சில் யாரும் ஒட்டாமல் தானாகவே ஓடிய படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்த அதிசயம் 1944ஆம் ஆண்டு இந்தத் தமிழகத்திலே நடந்தது. அதை நிகழ்த்திய படம் 'அரிதாஸ்'. அதில் நடித்தவர் தமக்குப் பின்னால் தம்மைப் போல் என்று சொல்ல வேறு யாரையுமே விட்டுச் செல்லாதத் திரையுலக எம்.கே. தியாகராஜ பாகவதர்.

1944க்கு முன்னாலும் அப்படி ஒரு படம் ஓடிய தில்லை. அதற்குப் பின்னாலும் ஓடப் போவதில்லை என்ற பெயரையும் பெருமையையும் நிரந்தரமாகவே பெற்றுவிட்ட அந்தப்படம், சென்னை பிராட்வே டாக்கீசில் ஓடிக் கொண்டிருக்கிறது. மக்கள் அந்தப் படத்தில் பாகவதர் பாடல்களை மட்டும் வீதிக்கு வீதி பாடிக்கொண்டிருக்கவில்லை; அதற்கு முன்னால் அவர் பல படங்களில் பாடியுள்ள பாடல்களையும்