பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மு. பரமசிவம் :

கொண்டே ராதே உனக்குக் கோபம் ஆகாதடி!' என்று பாடுகிறார்.

இதோ வெயிலில் வியர்க்க விறுவிறுக்க கட்டை வண்டியை இழுத்துக் கொண்டு செல்கிறானே, இவன் தனக்கு எதிர்த்தாற் போல் தலையில் புற்கட்டைச் சுமந்து வரும் பெண்ணைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே, மன்மத லீலையை வென்றார் உண்டோ என்று பாடுகிறான்.

அதோ நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி அணிந்து கோயிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறாரே ஒரு பக்தர்! அவர், மனமே ஈசன் நாமத்தை வாழ்த்துவாய்' என்று பாடிக்கொண்டே போகிறார். s

இதோ வாழ்க்கையில் வெறுப்புற்றுக் கையில் திருவோட்டுடன் கோயில் வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாரே பண்டாரம்! இவர், 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்பிரமணிய சுவாமி உன்னை மறந்தேன்! என்று பாடுகிறார்.

இப்படி எல்லோரும் தம்மை மறந்து பாடிக் கொண்டிருக்கும் வேளையில்தான் நெஞ்சைப் பிளக்கும் அந்தச் செய்தி வந்தது.

'பாகவதர் கைதானார்!’

திரு எம்.கே.டி. பாகவதரின் நீண்ட நெடிய வரலாற்றை, சாதனைகள் பல படைத்த சரித்திரத்தை ஒரே பக்கத்தில் அறிமுகப்படுத்தி நம்மை உலுக்கி விடுகிறார், விந்தன் தம் எழுத்து வன்மையில்! எம்.கே.டி. பாகவதரின் கதையில் பல சுவையான