பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 159

நிகழ்வுகளும் சில சுதந்திரமான சிந்தனைகளும் உள்ளன. அவற்றில் சில:

புராணக் கதைகளுக்கும், வரலாற்றுக் கதை களுக்கும், சமூகப் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களையும் அவற்றிலே புகுத்தி எழுதமுடியுமா?

முடியும் - சாத்தியம் என்று அந்நாளிலேயே தெள்ளத் தெளிவாக நிரூபித்துக் காட்டியவர் திரு. இளங்கோவன்.

திருநீலகண்டரில் ஒரு காட்சி! தாசி கலா வல்லி திருநீலகண்டரைத் தன் மாயவலைக்குள் சிக்க வைக்கப்பார்ப்பாள். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடக்கும். அந்த வாக்குவாதம் எப்படி யிருந்தது? எத்தனையோ பேருக்கிட்டே எலந்தம் பழம் பார்த்தியே. எடுத்துப் பார்த்த பயங்களிலே இம்மா சைஸ்”ப் பார்த்தியா? என்பது போலவா இருந்தது?

இல்லை, அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்கள் மனிதனைத் தேவனாக்க முயலா விட்டாலும் மிருகமாக்க முயலாமல் குறைந்த பட்சம் மனிதனை மனிதனாவாவது வைத்திருக்க முயன்றன. அவற்றில்தான் தர்க்கரீதியான கேள்விகள் எத்தனை? தத்துவ மயமான பதில்கள் எத்தனை?

அந்தக் கேள்விகளிலும் பதில்களிலும் இளங்கோவனையும், அவருடைய அசாதாரணமான எழுத்துத் திறமையையும் மட்டுமா நாம் கண்டோம்? மகாகவி ஷேக்ஸ்பியரையும் மனத்தைக் கவ்விப்