பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மு. பரமசிவம் :

பிடிக்கும் அவனுடைய மதிநுட்பத்தையும் கூட அல்லவா கண்டோம்.

ஆம், ஷேக்ஸ்பியர் தம்முடைய இளமைக் காலத்தில் எழுதிய 'ரேட் ஆப் லுக்ரிஸ் என்ற நூலி லிருந்தும் வீனஸ் அண்டு அடானிஸ்' என்ற காவியத்திலிருந்தும் சில சுவையான பகுதிகளை எடுத்து அதில் அவர் கையாண்டிருந்தது என்னவோ உண்மை தான். ஆயினும் அந்தத் திறமைதான். இன்றைய சினிமா கதை வசனகர்த்தாக்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது? அவர்களில் சிலர் தமிழில் இருந்து எடுத்துத் தமிழிலேயே எழுதக்கூட தெரியாதவர்களாக அல்லவா இருக்கிறார்கள்.

அதுமட்டுமா? அந்த நாளில் எழுத்துத் தொழில் புனிதமான தொழிலாக மதிக்கப்பட்டு வந்தது. அதை மேற்கொண்டு இருந்தவர்களும் அந்தத் தொழிலின் புனிதத்தைத் தங்களால் முடிந்தவரை காக்கக் கூடி யவர்களாயிருந்தார்கள். முக்கியமாக இளங்கோவனைப் போன்றவர்கள் ஒரு படாதிபதி வந்து தம்மை விரும்பி அழைக்காதவரை எந்த சினிமா கம்பெனி படியிலும் ஏறமாடடாா.

இதனால் என்ன நடந்தது?

படேடடே படாதிபதிகள்கூட இளங்கோவனுக்கு முன்னால் சிகரெட் குடிக்க யோசித்தார்கள்; மது அருந்தத் தயங்கினார்கள், மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் பேச அஞ்சினார்கள்.