பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 165

பாகவதர் அவர்கள் அன்று அந்தக் கூட்டத்தை விட்டுப் போனதும்; அந்த இடத்திலும் தங்கள் மனத்திலும் இருள் கப்பியது போலவே மக்கள் உணர்ந்தார்கள்.'

எம்.கே.டி. பாகவதர் கதையில் இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் மறக்க முடியாதவையாக அமைந்துள்ளன. நிறைவாக இதோ ஒரு நிகழ்ச்சி.

திரு. என்.எஸ். கிருஷ்ணன் புதுமனை புகுவிழா நடத்தினார். அதில் எம்.கே.டி. பாகவதர் கச்சேரி நடந்தது.

விழாவிற்கு வந்திருந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. நாதசுரச் சக்கரவர்த்தி டி.என். இராஜரத்தினம் பிள்ளை. பாகவதரின் பாட்டைக் கேட்டு மயங்கிய இராஜரத்தினம் பிள்ளை, ஒருபடி கீழே இறங்கி வந்து , சாதாரண ரசிகன் போல் ராதே உனக்குக் கோபம் ஆகாதடி பாடுங்கள், 'உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ, பாடுங்கள் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

நாதசுரச் சக்கரவர்த்திக்கு அவ்வளவு மயக்கம் பாகவதர் பாட்டில்!

கச்சேரி முடிந்தவுடன் கவிமணி பேசினார்: 'இதற்குமுன் பாகவதர் பாடல்கள் சிலவற்றை நான் கிராமபோன் ரிக்கார்டுகளின் வாயிலாகக்

கேட்டிருக்கிறேன். இப்போதுதான் முதன் முதலாக நேரில் பாடக் கேட்கிறேன். முன்னது கத்திரிக்காய்