பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●

166 மு. பரமசிவம் :

வற்றலைச் சமைத்து சாப்பிடுவது போல இருந்தது. பின்னது அன்று பறித்த கத்திரிக்காயை அன்றே சாப்பிடுவதுபோல அவ்வளவு சுவையாக இருந்தது. காரணம் ரிக்கார்டு எடுக்கும்போது, பாட்டை விட நேரத்தைதான் அதிகமாகக் கவனிப்பார்கள். குறிப் பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட பாட்டைப் பாடி முடிக்க வேண்டும் என்பார்கள். இங்கே அப்படி இல்லை. பாகவதரும் சுதந்திரமாகப் பாடினார். நாமும் சுதந்திரமாகக் கேட்டோம். இதனால் எனக்கு இன்னும் ஒரு அனுகூலம். இங்கே வரும்போது நான் நோயுற்று வந்திருந்தேன். இப்போது அந்த நோய் நீங்கிப் போகப் போகிறேன். ஆம், பாகவதரின் சங்ங்தம் எனக்கு யாரும் அளிக்க முடியாத சிகிச்சை அளித்து விட்டது!’’

கவிமணியின் நோயைப் போக்கிய பாகவதரின் சங்கீதம், கடைசிக் காலத்தில் அவருக்கு வந்துற்ற கண்ணின் நோயையும் போக்கியிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

தகவல் களஞ்சியமாக எம்.கே.டி. பாகவதர் கதையை எழுதிப் புகழ்பெற்ற விந்தன், 1971ஆம் ஆண்டு நடிகவேள் எம்.ஆர். ராதாவின் 'சிறைச்சாலை சிந்தனைகள்' என்னும் தலைப்பில் ராதாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

女 女 ★