பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 மு. பரமசிவம் :

தக்கவர் காஞ்சி காமகோடி பீடாதிபதி பெரியவர் சந்திரசேகர் சுவாமிகள்!

ஆம். வாரா வாரம் கதிரில் தொடரைப் படித்த பெரிய காஞ்சி சங்கராச்சாரியார் தம் உதவியாளரிடம், 'நான் எம்.ஆர். இராதாவைப் பார்க்க வேண்டும். வாழ்க்கையை ஒளிவு மறைவு இல்லாமல் உண்மை யாகச் சொல்லும் உயர்ந்த மனிதர் அவர். அவரை அழைத்து வாருங்கள்!” என்றாராம்.

இந்தத் தகவலைக் கேட்ட நடிகவேள், 'அவர் ரொம்ப பெரியவர்' என்று சிரித்துக் கொண்டாராம். பின்னர் எம்.ஆர். இராதாவும் பெரியவரை சந்திக்க வில்லை; பெரியவரும் ராதாவைப் பற்றிப் பேச வில்லை.

பெரியாரின் சீடரான எம்.ஆர். இராதா நாடறிந்த நாத்திகர் என்பதை நன்கு அறிவார் பெரிய சுவாமிகள். எனினும் ஒரு மனிதனின் வாழ்க்கை திறந்த புத்தகமாக அமையும்போது அந்தப் புத்தகத்தை எல்லோரும் விரும்பிப் படிப்பார்கள். அப்படி விரும்பிப் படித்தவர்தான் பெரியவர். அவர் பார்வையில் நாத்திகன் ஆஸ்திகன் என்கிற பேதமெல்லாம் மறைந்துவிட்டது.

எம்.கே.டி. பாகவதர் கதையை அவரின் மறைவிற்குப்பின் தகவல்களைச் சேகரித்து எழுதினார் விந்தன். ஆனால் நடிகவேள் எம்.ஆர். ராதாவின்