பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 169

கதையை அப்படி எழுதாமல், ராதாவை நேருக்கு நேர் சந்தித்து எள்ளல்தனமான வினாக்களைத் தொடுத்தார். அதற்கு ராதா அளித்த துணிச்சலான ஒளிவுமறைவு அற்ற சூடான விடைகளின் தொகுப்பு தான் ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்!

எம். ஆர். ராதாவின் சூடான விடைகளுக்கு ஒரு சான்று இதோ:

ஒரு நிருபர். உங்கள் மனைவியைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? அவரை ஒரு படம் எடுத்துக் கொள்கிறேன்! - என்கிறார் வினயத்துடன்.

"என் மனைவியை எதுக்குக் கூப்பிடறது? நான் மட்டும் பார்க்கத்தான் அவ இருக்கா. நீங்களும் உங்க பேப்பரை படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்ல." என்று ராதா பட்டென்று பதிலளிக்கிறார்.

சோத்துலே இருக்கிறது சோஷலிசம்! என்பார்கள் சிலர். அதைச் சுவையாகச் சொல்லுகிறார் இராதா.

நடிகர்கள் சிலர் பிறந்த நாள் கேக் வெட்டுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நினைப்பதற்கு என்ன இருக்கிறது? கேக் வெட்டுறதை ஒரு ஜோக் ஆக்கிட்டான் இந்த நாட்டிலே. மேல் நாட்டிலே அப்படி இல்லை. அதிலே ஒரு சமதர்ம சித்தாந்தமே அடங்கியிருக்கு. மனைவி மக்களோடு வீட்டு வேலைக்காரர்கள், நண்பர்கள், உறவினர்களையெல்லாம் அழைத்துப் பிறந்தநாள்