பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 171

அது. நான் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க அடிக்கடி அய்யங்கார் கடைக்குப் போவேன்.

'அப்போ அய்யங்கார் ஸ்பேர் பார்ட்ஸ் கடைதான் வைத்திருந்தாரா?

ஆமாம். அதுவும் ரொம்பச் சின்னக்கடை. நாலணாவுக்குச் சாமான் வாங்கினால்கூட அவர் மறக்காமல் எனக்கு காலணா கொடுப்பார். இப்படி ஏற்பட்ட தொடர்பு எங்கே வந்து நின்னதுன்னா பாலாற்றங்கரையிலே வந்து நின்னது.

பாலாற்றங்கரையிலா?

ஆமாம்! அந்த ஆத்து மேலே பாலம் கட்டிக்கிட்டிருந்த சமயம் அது. டிராமா குரூப்போடு நான் அந்த வழியா வேன்லே வந்துகிட்டிருந்தேன். ஆத்தைக் கடக்கற இடத்திலே ஒரே கூட்டம். என்னடான்னு பார்த்தா டி.வி.எஸ். லாரி ஒண்ணு ஆத்து மணல்லே சிக்கிக்கிட்டு இருந்தது. அதைத் தூக்கக் கிரேன் நிறுத்தியிருந்தாங்க.

அந்தப் பக்கம் இருநூறு வண்டி, இந்தப் பக்கம் இருநூறு வண்டி நிக்குது. டிராபிக் ஒரே ஜாம். நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். பொறுக்க முடியவில்லே. வேனை விட்டுக் கீழே இறங்கினேன். ஆத்திலே முழங்கால் வரை தண்ணிர்தான் இருந்தது. இறங்கி நடந்தேன்.