பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 மு. பரமசிவம் &

யாரப்பா அது? இங்கே பாருங்க, லாரி அசையறதா யில்லே! கிரேனும் அதைத் துக்குறதாயில்லே. இப்படியே இருந்தா நாங்க எப்போ ஊர் போய்ச் சேர்றது? ஒண்ணு, கிரேனை ஒரு மணி நேரம் ஒரு பக்கமா தள்ளி நிறுத்தி எங்களுக்கு வழி விடுங்க. இல்லேன்னா இந்த லாரியைக் கிளப்ப எனக்கு அரை மணி நேரம் அவகாசம் கொடுங்கன்னேன். நான் சொன்னதை ஒருத்தனும் காதிலே போட்டுக்கல்லே. அவனுங்க பாட்டுக்கு தஸ்புஸ்ணு இங்கிலிஷிலே ஏதோ பேசிக்கிட்டே இருந்தானுக. எனக்குக் கோபம் வந்து என்னடா சொல்றதைக் கேட்காம, தஸ்புஸ்சின்னு பேசிறீங்களேன்னேன். அப்போத்தான் நான் யாருன்னு அவங்களுக்குத் தெரிஞ்சுது. அதுக்குள்ளே என்னைச் சுற்றி ஒரு கூட்டமும் சேர்ந்தது. நான் மறுபடியும் விஷயத்தைச் சொன்னேன். -

கிரேனைத் தள்ளி நிறுத்தறுதுக்கில்லே, 'உங்களுக்கு வேணும்னா லாரியைக் கிளப்ப அரைமணி நேரம் அவகாசம் கொடுக்கிறோம்னு கொஞ்சம் கேலியாச் சொன்னானுக. கெடக்கிறானுக ன்னு நான் வேனைக் கொண்டு வரச் சொல்லி அதிலே இருந்து கம்பெனி ஆட்களையெல்லாம் கீழே இறங்கச் சொன்னேன். டி.வி.எஸ். லாரியை அன்லோடாக் கிறதுக்காக அதிலிருந்த சரக்கையெல்லாம் இறக்கி என் வேன்லே போடச் சொன்னேன். இப்போ என்ன ஆச்சு? லாரி லைட்டாச்சு. வேன் வெயிட்டாச்சு. அந்த