பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 175

15

விந்தனின் திரைப்பாடல்கள்

சுத்தாத இடமில்லை

படம்: அன்பு ஆண்டு : 1953

பாடியவர் : ஏ.எம். ராஜா இசை : டி.ஆர். பாப்பா

சுத்தாத இடமில்லை கேட்காத பேரில்லே! சோத்துக்கு வழிகாட்ட ஆளில்லே! செத்து பின்பு சிவலோகம் செல்ல வழிகாட்டும் பித்தர்கள் ஏனிந்த நாட்டிலே! ஒண்ணும் புரியவில்லை தம்பி - எனக்கு ஒண்ணும் புரியவில்லை தம்பி! கண்ணு ரெண்டும் சுத்துது காதை அடைக்குது கஞ்சி கஞ்சி என்று வயிறு கெஞ்சிக் கெஞ்சிக்

கேட்குது (ஏன்) கடவுளை நம்பினேன் கற்பூரம் செலவு கல்வியை நம்பினேன் காசெல்லாம் செலவு மனிதனுக்கு மனிதன் மனமிரங்கவில்லை மானத்தோடு வாழ மார்க்கம் ஏனோ இல்லை இயற்கையின் செல்வமெல்லாம் ஏழையாலே

பெருகுது!