பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 187

அற்றவர்கள் படத்தோல்விக்கு வேறு காரணங்களை சொல்லுவது வேடிக்கையானது; வருத்தத்துக்குரியது. கல்கி, பத்திரிகையில் சிறு கதைகள் நாவல்கள் எழுதி புகழ்பெற்ற விந்தன் சினிமாவுக்கு வந்தபோது தி.மு.க பேரை சொல்லிக்கொண்டு சினிமாவுக்கு வந்தவர்கள் விந்தனின் சினிமா வருகை நம்மை பாதிக்கும் என்று கருதினார்கள்.அதற்கேற்றவாறு 1953, 1954ஆம் ஆண்டுகளில் விந்தன் மூன்று படங்களுக்கு வசனம் எழுதியதோடு சில பாடல்களையும் எழுதினார். பாடல்களில் குறிப்பிடத் தக்கவை. கூண்டுக்கிளி'யில் பாடப்படும் கொஞ்சுங் கிளியானப் பெண்ணைக் கூண்டுக்கிளியாக்கி விட்டு கெட்டி மேளம் கொட்டுவது சரியா? தப்பா? என்ற பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பி பாடப்படுகிறது.

விந்தன் வசனம் எழுதிய வாழப்பிறந்தவள்’ சுமாரான வெற்றிப்படம். சிவாஜிகணேசன் - பத்மினி நடித்த 'அன்பு மாபெரும் வெற்றிபடம் மூன்றாவது படம் கூண்டுக்கிளி இப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும்தான். அதை விடுத்து விந்தன் வசனம் எடுபடவில்லை. நடிகைகள் சரியில்லை என்பதெல்லாம் சரியான விமர்சனம் அல்ல.

விந்தன் கூண்டுக்கிளிக்கு எழுதிய வசனங்களை பல பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. தாங்கள் விந்தன் வசனம் எடுபடவில்லை என்று எழுதுவதின்மூலம் படத்தின் தோல்விக்கு இவரே முக்கிய காரணம் என்பது போல் தொனிக்கிறது.