பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 17

எழுத்தில் கொப்பளித்துத் துப்பிய எரிமலை எழுத்தாளர் இருவரை இந்தத் தமிழகம் கண்டது.

ஒருவர் புதுமைப்பித்தன்! மற்றொருவர் விந்தன்!

இருவரது எழுத்திலும் எரிச்சலும் எள்ளலும் இருந்தது ஒற்றுமை! வெளிப்படுத்திய விதத்தில் மட்டுமே கொஞ்சம் வேற்றுமை! கால் நூற்றாண்டு கரைந்து போன பின்னும் கருத்தில் முளைப்பதே அவர்களது வெற்றி!

வளையாத பேனா, வற்றாத பேனா! மனமும் அப்படி, மனிதரும் அப்படி! வளைந்து கொடுத்துப் பழகியிருந்தால் வாழ்ந் திருக்கலாம். நெளிந்து கனிந்து நேசம் காட்டி யிருந்தால் விளம்பரத்தில், செல்வத்தில் நிலைத்

ருக்கலாம்.

பொய்ச்சிரிப்பும் பொய்ப் பசப்பும் கொஞ்சம் கைக் கொண்டிருந்தால் மத்தாப்பு வாணம்போல் சிறிது காலம் மாளிகை வாழ்வு கிடைத்திருக்கும்.

மாறாத மனிதர் மருட்சிக்குரியவர். அதனாலேயே துயரங்களில் துவண்டார்; துன்பங்களில் வீழ்ந்தார்; வறுமையில் தொலைந்தார்.

மனிதர் மறைந்தார்; அம்மனிதரின் சிந்தனைகள் மறையவில்லை!

எழுத்தின் ஆற்றல் இன்றும் நீள்கிறது. இனியும் நீளும்.