பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 மு. பரமசிவம் :

1958இல் நடிகமணி நாராயணசாமி தலைமையில் இவரின் சிந்திய கண்ணிர் என்ற நாடகம் அறங்கேற்றப்பட்டது.

1959இல் முன்னாள் ஜனசக்தி துணையாசிரியர் ஐ.மாயாண்டி பாரதி தலைமையில் அரங்கேறியது, ‘வாழ்க்கைப் பாதை' என்ற நாடகம்.

1964இல் டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் 'பாலும் பாவையும் என்ற நாடகம் அரங்கேறியது.

1973 முதல் 1974 வரையில் கற்சிலை என்ற சிறு பத்திரிகையை நடத்தியுள்ளார். இந்தப் பத்திரிகையில் எழுதிப் பழகியவரே இன்று ஓவியக்கலை விமர்சகரான கவிஞர் இந்திரன்.

1979இல் விந்தன் பாணியில், 'மோகத்தைக் கொன்றுவிடு' என்ற நாவலை எழுதியவர்.

1982இல் 'விந்தனும் விமர்சனமும் என்ற நூலைத் தொகுத்தார், 1983இல் மக்கள் எழுத்தாளர் விந்தன் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

தொடர்ந்து விந்தன் நாவல்கள் என்ற ஆய்வுநூலையும் விந்தனின் கதைகள், கட்டுரைகள், மனிதன் - இதழ் தொகுப்பு இவற்றுடன் கவிஞர் தமிழ்ஒளி, நாடு போற்றும் நாரண துரைக்கண்ணன், எழுத்துச் செல்வர் வல்லிக்கண்ணன், கு. அழகிரிசாமி,