பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மு. பரமசிவம் :

இல்லத்தில் இல்லாமல் மறைந்தவர் படிப்போர் உள்ளத்தில் பசையாய் ஒட்டி நிறைந்திருக்கிறார். நிலைத்திருக்கிறார்!

மனிதருக்கு மறுபிறவி உண்டா? தெரியாத நிலை! எழுத்துக்கு மட்டும் மறுபிறவிகள்! மறு பதிப்புகள்!

வென்றவர்போல் மினுக்கியவர்களைக் காலம் மறைத்து மூடிவிட்டது.

தோற்றவர்போல் துவண்டவர்களை எழுத்தும் கருத்தும் தூக்கி நிறுத்துகின்றன!

தலை எழுத்து என்பது என்ன? தெரியாதது அது! எழுத்தாளனின் இதய எழுத்துக்கள் மட்டும் இறவாமல், துளிர் விடுகின்றன. தலைநிமிர்ந்து வீறு நடை போடுகின்றன.

சரியாத எழுத்துக்கும் சரியான சிந்தனைக்கும் இறவாத புகழுண்டு. இதை விந்தன் அவர்களின் விந்தை எழுத்துக்கள் விளக்கிக் காட்டுகின்றன.

அவர் அள்ளித் தெளித்த அனல் கருத்துகள் அணையாமல் கனன்றபடி சூடேற்றிச் சுறுசுறுப்பைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவும் ஒரு விந்தை!

சிறுதைகள், கட்டுரைகள், திரைக்கதை உரை யாடல்கள், திரைப்படப் பாடல்கள், வரலாற்று வண்ணத் தொடர்கள் எனப் பல துறைகளில் விந்தனின் சிந்தனைச் சிதறல்கள் வெளிப்பட்டன.

அவரது கைவண்ணமும் கலைவண்ணமும் கருத்துக் காட்சிகளாய் தமிழில் மலர்ந்து, படிப்போர் மனத்தில் புரட்சியைப் பொங்கச் செய்தன.