பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மு. பரமசிவம் :

விந்தன் வாழ்க்கைக் குறிப்புகள்

1916-செப்டம்பர்த் திங்கள் 22ஆம் நாள் செங்கற்பட்டு மாவட்டம் நாவலுர் என்னும் சிற்றுாரில் வேதாசலம் - ஜானகியம்மாள் தம்பதிகளின் தலை மகனாகப் பிறந்தார். இயற்பெயர் கோவிந்தன். உடன் பிறந்தவர் சாமிநாதன் என்கிற இளவல் ஒருவர் மட்டுமே.

1921ஆம் ஆண்டு சென்னை - சூளை பட்டாளம் பகுதியில் உள்ள பி. அண்ட். சி. பஞ்சாலையின் புகழ் எவ்வளவு பெரியதோ அதைவிடப் பெரியது. பன் மடங்குப் பெரியது அந்தப் பகுதியில் வாழும் தொழிலாளர்களின் போராட்ட உணர்வுகள். வர்க்கப் போராட்டங்கள் நிகழ்வதற்குக் களமாக அமைந்த அம்மண்ணையே தம் வாழும் இடமாகக் கொண்டு இளமைக் கல்வியைத் தொடங்கினார் கோவிந்தன்.

1931இல் வசதியும் வருவாயும் ஓரளவுக்கு இருந்த போதிலும் கல்வி இல்லாமையும் மூடப் பழக்க வழக்கங்களும் கொண்ட பெற்றோர்கள் அவரது படிப்பில் கவனம் செலுத்தத் தவறினார்கள். எனினும் விழிப்பும் வெளிச்சமும் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவை என்பதை உணர்ந்த கோவிந்தன் இரவுப் பள்ளிகளில் படித்துத் தம் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டார். அதனுடே ஓவியம் கற்க விரும்பி விையப்பள்ளியில் சேர்ந்தார்.