பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 27

திரையுலகில் விந்தன் !

1930ஆம் ஆண்டின் தொடக்கக் காலத்தில் தமிழ் சினிமா பேசத் தொடங்கிய போதிலும் 1940இல்தான் தமிழ் சினிமா தமிழில் பேசியது!

அந்த ஆண்டில்தான் புகழ் பெற்ற இலக்கிய வாதிகள் பலர் கதை வசனம் பாடல்கள் எழுத வந்தார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் இளங்கோவன், புதுமைப்பித்தன், விந்தன், பாரதி தாசன் போன்றவர்கள். இவர்களின் எழுத்துத் திறமையில் நம்பிக்கை வைத்து சினிமாத் துறைக்கு அன்புடன் அழைக்கப்பட்டவர்கள்.

அதே காலத்தில் பலரின் அன்பான அழைப்பையும் ஆலோசனைகளையும் ஆசைகளையும் ஏற்க மறுத்துச் சுயமரியாதையோடு ஒதுங்கியவர்கள் திரு. வல்லிக் கண்ணன், கு. அழகிரிசாமி ஆகியோர்.

ஒரு சமயம் புகழ் பெற்ற திரைப்படத்தயாரிப்பாளர் ஒருவர் கு. அழகிரிசாமியை அணுகி, கு. அ.வின் ஒரு குறுநாவலைப் படமாக்க விரும்பினார்.

தமிழ் சினிமாவின் பேரில் வெறுப்புற்றிருந்த கு. அழகிரிசாமி, அனுமதி வழங்கத் தயங்கினார். ஆனால், திரைப்படத் தயாரிப்பாளர், படைப்பாளரின் அனுமதி இல்லாமல் கு.அ.வின் குறுநாவலைத் திரைப்படமாக்கினார். சகலவிதமான சினிமாத்