பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையு.ல்ெ விந்தன் 29

1940இல் "காளமேகம்' என்ற படத்துக்குக் கதை, வசனம்,பாடல்கள் எழுத பாரதிதாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இயக்கம் எல்லிஸ் ஆர். டங்கன்.

பாரதிதாசனின் நண்பர் பி.எஸ்.செட்டியார். அவர் பத்திரிகைகளில் கதை - வசனம் பாடல்கள் பி.எஸ்.செட்டியார் என்று விளம்பரப்படுத்தினார். இந்த விளம்பரத்தைக் கண்டு கோபம் கொண்ட பாரதிதாசன் 'என்ன பி.எஸ்.செட்டி! உனக்குப் பலமுறை சொல்லி விட்டேன். தொடர்ந்து அப்படியே விளம்பரம் வருகிறது. என் விஷயத்தில் ஜாக்கிரதையா நடந்து கொள். ஏன் தெரியுமா? நான் புதுச்சேரிக்காரன், சுட்டுடுவேன்' என்றார். பின்னர் பத்திரிகைகளில் கதை-வசனம், பாடல்கள் பாரதிதாசன் என்று வந்தது.

பாரதிதாசன் பல படங்களுக்குக் கதை-வசனம், பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றார். அவற்றில் பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் என்னும் குறுங் காவியத்தைத் தழுவி எடுக்கப்பட்ட பொன்முடி என்ற திரைப்படம் குறிப்பிடத்தக்கது.

சினிமாத் துறையில் சுயமரியாதைக்காரராக வாழ்ந்த பாரதிதாசன், பிற்காலத்தில் ஒரு சினிமா நடிகரை நம்பி,சொந்தமாகத் தமது பாண்டியன் பரிசு’ என்னும் காவியத்தைத் திரைப்படம் எடுக்க முயன்று தம்முடைய சிறுசேமிப்பை, அமைதியை இழந்து

  • ஆதாரம் : கருப்புக் குமிலின் நெருப்புக்குரல் - மன்னச் மன்னன்