பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மு. பரமசிவம் :

இறுதியில் மரணத்தைத் தழுவினார் என்பது கவிஞர் வரலாற்றின் இறுதி அத்தியாயமாகும்.

1947இல் ஜூபிடரின் 'இராஜகுமாரி, 1948இல் ஜூபிடரின் 'அபிமன்யு ஆகிய இரு படங்களுக்கும் கதை-வசனம் எழுதினார் மு. கருணாநிதி. அந்த இரண்டு படங்களுக்கும் கதை-வசனம் கருணாநிதி என்ற பெயர் வரவில்லை. ஏ.எஸ்.ஏ.சாமி என்ற பெயரே வெளிவந்தது.

'அபிமன்யு என்ற படத்தை மனைவியுடனும், நண்பர்களுடனும் பார்க்கச் சென்ற மு.க., திரையில் தம் பெயர் வராததைக் கண்டு கொதிப்படைந்தார். மறுநாள் பட முதலாளிகளிடம் தம் கோபத்தை வெளியிட்டார். முதலாளிகள் அவருக்கு ஆறுதல் சொல்லி அடுத்த படங்களில் பெயர் வரும் என்று சொன்னார்கள்: (ஆதாரம்: பொம்மை 1979)

மு.க.வின்மைத்துணர்திரு. சிதம்பரம் ஜெயராமனின் பரிந்துரையின் பேரில் தமிழ்சினிமாவில் அடியெடுத்து வைத்தவரை தக்கத் தருணத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரத்திடம் அறிமுகப்படுத்தி வைத்தார், பாடலாசிரியர் கவி கா.மு. ஷெரிப்.

(ஆதாரம்: கலைஞரின் நெஞ்சுக்கு நீதி/ மாடர்ன் தியேட்டர்சின் வெற்றிப்படமான 'மந்திரி குமாரி'யைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் மு.க.வின் வசனச் சிறப்பால் வெற்றியடைந்து £ 6T6ss 60s.