பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 31

தமிழ்த் திரையில் மு.க.வின் அசல் படைப்புகள் இடம் பெறாத போதிலும் அடுத்தவர்களின் படைப்புகளான பராசக்தி, மனோகரா, மணமகள், பணம், மலைக்கள்ளன் போன்ற கதைகள், மு.க.வின் துடிப்பான தமிழால், முற்போக்கான கருத்துக்களால் வெற்றியடைந்தன.

மு.க.வின் வசனத்தில் பழந்தமிழ் பாடல்வரிகள், பாரதிதாசன், விந்தன் போன்ற இலக்கியவாதிகளின் கருத்துக்கள் நிரம்பக் காணப்படுகின்றன என்னும் தகவல் நம்பகமானதாக இருந்தபோதிலும், சில கருத்துக்களை மு.க. எழுத்தாள நண்பர்களின் அனுமதியுடன் கையாண்டுள்ளார். உதாரணத்துக்கு விந்தனின் புகழ்பெற்ற 'பாலும் பாவையும் நாவலில் வரும், 'ஓடினாள்... ஓடினாள்... வாழ்க்கையின் ஒரத்திற்கே ஓடினாள் என்னும் வரிகளாகும்.

கலைஞரின் வசனங்களின் பேரில் சில இலக்கியவாதிகளுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. உதாரணத்துக்கு எழுத்தாளர் ஜெயகாந்தனைச் சொல்லலாம். ஜெயகாந்தன் சொன்னார் :

“உங்களுடைய சினிமாப் படங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். பழைய படங்களின் வசனவரிகள் எனக்கு மனப்பாடம்!”

(ஆதாரம்: கல்பனா - ஆகஸ்ட், 1979) எது எப்படியோ, சினிமா சிறந்த சாதனம். அதன் வழியாகச் சொல்லப்படும் கருத்துக்கள் விரைவில் மக்களைச் சென்றடையும். அதோடு அவர்கள்