பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

↔

34 மு. பரமசிவம் *

மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய ‘மந்திரி குமாரி", 'திரும்பிப் பார் ஆகிய படங்களை வெளியிட்ட தோடு, சி.பி.சிற்றரசு வசனம் எழுதிய ‘சர்வாதிகாரி", பாரதிதாசனின் 'பொன்முடி' ஆகிய படங்களைத் தயாரித்து, தி.மு.க வளர்ச்சிக்குத் துணை புரிந்தார்.

மகாகவி பாரதியாரின் பாடல்களில் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததோடு பாரதியாரின் பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் உரிமை பெற்றி ருந்தார், ஏவி. மெய்யப்பன்.

பாரதியாரின் பாடல்கள் நாட்டுடமை ஆக்க அமைக்கப்பட்ட பாரதி விடுதலைக் கழகம் என்ற அமைப்பில் அறிஞர் வ.ரா., நாரண துரைக்கண்ணன், வல்லிக்கண்ணன், நடிகர் டி.கே.சண்முகம் ஆகியோர் பணியாற்றினர்.

தமிழக முதலமைச்சர் ஒமாந்துனர் இராமசாமி ரெட்டியாரின் கோரிக்கைக்கு இணங்கிப் பாடல்களின் உரிமையை மெய்யப்ப செட்டியார் விட்டுக் கொடுத்தார். இவர்தான் கலைஞர் கருணாநிதியின் 'பராசக்தி", அண்ணாவின் 'ஓர் இரவு', எம்.ஆர்.ராதாவின் 'ரத்தக் கண்ணி ஆகிய படங்களை எடுத்து, தி.மு.க. வின் வளர்ச்சிக்குத் துணை புரிந்த காங்கிரஸ்காரர்; காமராஜரின் நண்பர்.

女 女 女