பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 மு. பரமசிவம்


அந்தக் கதைகளில் கையாளப்பட்ட தமிழ்நடை, பிராமணக் குடும்பங்களில் வழங்கும் தமிழாகவே இருந்தது. பிராமண எழுத்தாளர்கள் கஷ்டப்பட்டு வேறு சாதியாரைப் பற்றிக் கதை எழுதும்போது அவர்கள் வர்ணிக்கும் நடை உடை பாவனைகள் அவ்வளவு சரியாய் இருப்பதில்லை.


இந்தச் சமயத்தில் I5 நவயுக மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ருஷ்யக் கதைகளையும் மற்ற மேனாட்டுக் கதைகளையும் படித்தார்கள். அந்தக் கதைகளைப் போலவே இந்த நாட்டு ஏழை எளியவர்களையும் உழைக்கும் உழைப்பாளிகளைப் பற்றியும் கதை எழுத ஆரம்பித்தார்கள்.


விந்தன் உழைப்பாளி மக்களிடையே பிறந்து வளர்ந்து உழைத்துப் பண்பட்டவர். ஏழை எளியவர்கள், தொழிலாளர்கள் பட்டாளிகளின் சுகதுக்கங்களை இதயம் ஒன்றி அனுபவித்து உணரும் ஆற்றல் பெற்றவர். அந்த உணர்ச்சிகளைத் தமிழ் நடையில் சித்திரித்து இலக்கியப் பண்பு வாய்ந்த சிறுகதைகள் பலவற்றை அவர் திறம்பட எழுதியுள்ளார்.


அவருடைய கதாபாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு எல்லாம் நாம்தான் காரணமோ என்று எண்ணியெண்ணித் தூக்கம் இல்லாமல் தவிக்க நேரும்..."