பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மு. பரமசிவம் :

'தெரியாது!"

'உங்களுடைய தொடர்கதை என்று பலர் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்களே. அதற்கு என்ன சொல்கிறீர்கள்?"

"அவர்கள் ஒரு வேளை என்னுடைய விரோதி களாக இருக்கலாம்."

'இல்லை, உங்களுடைய அபிமானிகள்தாம் அப்படி எழுதியிருக்கிறார்கள். அத்துடன் கல்கியில் ஏன் அவர் தொடர்கதை எழுதக் கூடாது என்றும் கேட்டிருக்கிறார்கள்."

"அவர்கள் நாசமாய்ப் போகட்டும் என்று மனதுக்குள் சபித்துக் கொண்டே நான் பலிபீடத்தில் நிற்கும் ஆடுபோல் நின்றேன்!"

'அதற்குப் பின் ஆசிரியர் அவர்கள் என்ன நினைத்தார்களோ, என்னமோ 'சரி போய்வாருங்கள் என்று என்னை அனுப்பிவிட்டார், வீட்டுக்கல்ல; காரியாலயத்துக்குத்தான். அதன் விளைவே கல்கியில் தொடராக வெளியாகி உங்கள் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்த 'பாலும் பாவையும் ஆகும்.'

1950இல் கல்கி இதழில் தொடராக வெளிவந்த இந்நாவல் விந்தனுக்குப் பலவிதமான பாராட்டுதல் களையும், பாதிப்புகளையும் உண்டாக்கி இலக்கிய உலகில் பெரியதோர் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால் வள்ளுவருக்கு ஒரு திருக்குறள், கம்பனுக்கு ஓர்