பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மு. பரமசிவம் :

என்ற எண்ணத்தோடு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களைச் சந்தித்து என் எண்ணத்தைக் கூறினேன். 'நான் ஆச்சரியப்படும்படி உடனே அனுமதி அளித்தார். தனது கதர் அவங்கவஸ்திரத்தை விசிறி தோளில் போட்டுக் கொண்ட ஆசிரியர் கல்கி, 'படத்தின் பெயர் வாழப்பிறந்தவளா? பேஷ் பேஷ்! விந்தன் வாழவேண்டிய உழைப்பாளி. எந்தப் பிரச்சனையையும் அழுத்தமாகத் தன் எழுத்தால் எடுத்துரைக்கும் இலட்சிய இளைஞர். சினிமா உலகில் அவருக்கு நீங்கள் வாய்ப்பு அளிப்பதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்" என்றார்.

'கல்கியில் பணியாற்றிக் கொண்டே ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எங்களது ஆர்.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்திற்கு விந்தன் வந்து திரைக்கதை - வசனம் எழுதி வந்தார். எழுதுவதற்கு ஒட்டல் அறை ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும் என்றோ வீட்டுக்குக் கார் அனுப்பி அழைத்துவர வேண்டும் என்றோ அவர் கெடுபிடி செய்யவில்லை!

"எங்களது அலுவலகத்து மாடி அறையில் குறுக்கும் நெடுக்குமாக, சிறுநடை போடுவார். வாயில் சுருட்டு புகைந்து கொண்டே இருக்கும். அந்த இரண்டும் அவரது சிந்தனைக்குத் தூண்டுகோல்கள். 'மூடை எதிர்பார்க்காமல் விரைவாக எழுதித் தள்ளி விடுவார். நான் எதிர்பார்த்ததைவிட அவருடைய எழுத்துக்கள் சிறப்பாக இருந்தன." குங்குமம்:மார்ச் 199து