பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

46 மு. பரமசிவம் :

அதன்படியே சிவாஜி கணேசன், பத்மினி போன்றவர்களை நடிக்க வைத்துச் சில காட்சிகளை படமாக்கியது. எனினும் சில பிரச்சனைகளால் அந்த முயற்சியைக் கைவிட்டது ஏவி.எம்.! அதற்ரு யார் காரணம்? சினிமாத்துறையின் சின்னத்தனங்கள்தாம்.

எக்காலத்திலும் விந்தன் தன் எழுத்துரிமையில் மிகுந்த கவனமாக இருந்தது போலவே உழைப்புக் கேற்ற ஊதியம் பெறுவதிலும் உறுதியாக இருப்பார்.

ஏவி.எம். நிறுவனம் எழுத்தாளர்களுக்குக் கொடுத்து வந்த மதிப்பும் ஊதியமும் விந்தனுக்கு ஒத்துவராததால் அந்நிறுவனத்தின் உறவை அறுத்துக் கொண்டார். இதே விஷயம் டி.கே.சண்முகம் நாடகக்

கம்பெனியிலும் நடந்தது.

விந்தனின் 'பாலும் பாவையும் நாவலைப் படித்துப் பாராட்டியவர்களில் இலக்கிய உணர்வு மிக்க அவ்வை டி.கே. சண்முகம் அவர்களும் ஒருவர்.

டி.கே.சண்முகத்தின் சகோதரர்கள் விந்தனின் 'பாலும் பாவையும் நாவலை நாடகமாக்க விரும்பினர். அதற்கு விந்தனும் இசைவு தந்தார். ஆனால் டி.கே.எஸ்.சகோதரர்கள் எழுத்தாளர்களுக்கு அளித்த ஊதியத்தில் விந்தனுக்கு உடன்பாடு இல்லாததால் நாடகம் அரங்கேறும் வாய்ப்பை இழந்தது. ஆனால், பேராசிரியர் கல்கி, நாரண துரைக்கண்ணன் போன்ற எழுத்தாளர்கள் டி.கே.சண்முகம் குழுவினரோடு ஒத்துழைத்து, கள்வனின் காதலி', 'உயிரோவியம்' போன்ற நாவல்களை நாடகமாக்கி அரங்கேற்றிப் புகழ் பெற்றார்கள் என்பது வியப்புக்குரியதாகும்.