பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 47

இந்த இடத்தில் ஒரு தகவல் :

புகழ்பெற்ற நிறுவனங்களால் கைவிடப்பட்ட நாவலை என் முயற்சியால் என் சொந்தச் செலவில் (இந்நூல் ஆசிரியர்) 15.7.1964 அன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் நாடகமாக அரங்கேறியது. நடிகர்கள்: சினிமா நடிகர் கள்ளபார்ட் நடராசன், ஆர். காந்திமதி, செஞ்சி கிருஷ்ணன் ஆகியோர். அப்போது விந்தன் சொன்னார்: 'நாடகம் உங்களுக்கு தொழில் அல்ல; அதனால் உங்களிடம் வியாபாரமும் இல்லை."

1967இல் அகில இந்திய வானொலி நிலையம் விந்தனின் 'பாலும் பாவையும் நாவலைப் பட்டுக் கோட்டை குமாரவேல் நாடகமாக்க, அனைத்து இந்திய மொழிகளிலும் ஒரு மணிநேர நாடகமாக அரங்கேற்றியது. பின்னர் பட்டுக்கோட்டை குமாரவேலு திருச்சியில் இதே நாடகத்தை மேடை நாடகமாக நடத்தினார்; அப்போது அதிசயம் நடந்தது!

நாற்பது ஆண்டு இலக்கிய வாழ்க்கையில் விந்தன் எதையும் எழுதியே சாதிப்பது என்ற கொள்கை யுடையவர். அதனாலேயே அவர் மேடைகில் பேசுவதைத் தவிர்த்து வந்தார். பலமுறை பேராசிரியர் கல்கி, விந்தனைப் பேச வைப்பதற்கு முயற்சி எடுத்து தோற்றுப் போனதும் உண்டு.

இந்த நிலையில் திருச்சியில் நடைபெற்ற 'பாலும் பாவையும் நாடகத்திற்கு விந்தன் தலைமை தாங்கிப் பேசியது பேராச்சரியத்துக்குரியது.