பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

©.

  • திரையுலகில் விந்தன் 49

கான்; வந்தபடியே போனான் கான்? என்ற அவர் வாக்குபடியே மரணம் அடைந்தார்.

விந்தனோ சினிமா மயக்கத்தில அத்துறைக்குப் போய் சுதந்திரத்தை, சுயமரியாதையை இழக்க விரும்பாமல் மீண்டும் பத்திரிகைத் துறைக்கு வந்து இருபது ஆண்டுகள் அன்றாடம் செத்துச் செத்துப் பிழைத்து, வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கிடையே பிறந்தும் வளரமுடியாத என் நாவல்கள் சர்வ வல்லமை யுள்ள காசால்தான் காப்பாற்ற முடியுமா? கடவுளே உன்னால் முடியாதா? என்று கண்ணிர் சிந்தி, அந்தக் கண்ணிரோடே காலமானார்.

கல்கி இதழில் பத்து ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணி புரிந்த விந்தன், பேராசிரியர் கல்கி அவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுப் புகழ்பெற்ற எழுத்தாளராகத் திகழ்ந்த நிலையில், தம் விலகல் கடிதத்தைக் கல்கியிடம் அளித்தார்.

திரு.வி.க.வின் நவசக்தியைவிட்டு விலகி, கல்கி, ஆனந்தவிகடன் போக எண்ணியபோது, 'உங்கள் விருப்பத்துக்கு நான் தடையாக இருக்க மாட்டேன். மீண்டும் நீங்கள் பணியாற்ற விரும்பினால் தாராளமாக வரலாம். உங்களுக்கு எப்போதும் இங்கு இடம் உண்டு” என்றாராம் திரு.வி.க. அதைப்போலவே கல்கி சொன்னபோது சினிமா மயக்கத்தில் இருந்த விந்தன் தம் வழக்கமான சிரிப்போடு தம் ஆசிரியரிடமிருந்து விடை பெற்றார். இந்த விலகலைப்பற்றி இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் விந்தன் எழுதினார்.

தி.வ. - 4