பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மு. பரமசிவம் :

“ஏதோ ஏதோ ஒரு மயக்கம் என்கிறார்களே சினிமாவில் வரும் காதலர்கள். அப்படியொரு மயக்கம் அடியேனையும் அந்நாளில் ஆட்கொண்டது. அதன் காரணமாகப் பல வகையிலும் எனக்குக் கற்பனைத் தருவாக இருந்த கல்கி அலுவலகத்தைவிட்டுக் கல்கி அவர்கள் எச்சரித்தும் கேட்காமல் விலகினேன்; நடக்கக் கூடாதது நடந்தது 1951ஆம் ஆண்டில்.

கல்கி இதழில் பணிபுரிந்தபோதே விந்தனுக்கு சினிமா வட்டாரத்தில் சில நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் திரைப்பட இயக்குநர், திரைக்கதை வசன கர்த்தாக்கள், பாடலாசிரியர்கள் ஆகியோர் உண் டென்றாலும் திரைப்படத்துறையில் அனுபவ மிக்க தொழிலாளத் தோழர்களிடையே, குறிப்பாகத் தையல் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கி, திரைப் படத் தயாரிப்பாளராக, இயக்குநராக வளர்ந்த எம்.நடேசன், எம்.கே.தியாகராஜ பாகவதரின் உறவினரும், பாகவதரின் புகழ் மிக்க திரைப் படங்களுக்குச் சிறந்த ஆலோசகராக இருந்து வந்த மாவன்னாஆச்சாரி போன்றவர்களும் விந்தனின் தோழமைக் குரியவர்களாக இருந்தார்கள்.

நண்பர்களின் ஏற்பாட்டின்படி அக்காலத்தில் வெற்றிக்கொடி நாட்டிய நடிகர், சகலகலா வல்லவர் பி.யு.சின்னப்பா அவர்கள் தயாரித்த வானவிளக்கு என்னும் திரைப்படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு விந்தனுக்கு வாய்த்தது.

விந்தனைப் போலவே சுயமரியாதைக்காரரான சின்னப்பா, விந்தனைப் பெரிதும் மதிக்கவே செய்தார்.