பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 51

ஆனால் 'வானவிளக்கு பாதியிலேயே நின்று விட்டது.

அதே காலகட்டத்தில் விந்தனின் ரசிகரும், நட்சத்திர நடிகையான டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரருமான டி.ஆர். ராமண்ணா தயாரித்த ஆர்.ஆர்.பிக்சர்ஸ் வாழப்பிறந்தவள்’ என்ற படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றார்.

'வாழப் பிறந்தவள் வங்க எழுத்தாளர் சின்ஹா என்பவர் எழுதிய கதையைத் தழுவி எடுக்கப்பட்டது.

‘வாழப்பிறந்தவள்’ நாட்கணக்கில் நடைபெற்று வெற்றி விழாக்கள் கொண்டாடவில்லை. என்றாலும் கருத்துள்ள படம் என்னும் பாராட்டைப் பெற்றது. அந்த அளவுக்கு விந்தனின் இலக்கியத் தரமான வசனங்கள் பெரிதும் உதவின. மேலும் சினிமா உலகத்துக்குப் புதியவர் ஆனதால் விந்தன் எழுத்தில் சினிமாத்தனங்களைக் காண முடியவில்லை.

‘வாழப் பிறந்தவள்’ கதை

ஆம், உணராத சமூகத்துக்கு உணர்த்துகிறோம், அவள் சாகப் பிறக்கவில்லை! வாழத்தான் பிறந்தாள்.

ஆனால், பெண்களைப் பஞ்சுமெத்தைகளாகக் கருதி அடிக்கடி படுக்கையை மாற்றும் ஆண் வர்க்கம் அவளை வாழ விட்டதா? அந்த வர்க்கத்தை எதிர்த்து நின்று அவளால் வெற்றிபெற முடிந்ததா? அதுதான் அபலை கீதாவின் கதை!

ஏன், நம் நாட்டுப் பெண்களின் கதையும் அது தானே!