பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 53

விழுந்தார். அவனோ, ஏழைகள் வாழ்வது பணக்காரர் களுக்கு அவமானம்! என்று இறுமாப்புடன் சொல்லி அவரை எட்டி உதைத்துக் கொட்டும் மழையில் தள்ளிவிட்டான்,பாவி!

கிழவர் என்ன செய்வார்? எமனின் உதவியை நாடித் தன் இன்னலைத் தீர்த்துக் கொண்டார்.

அவரைப் பிரிந்த தாயும் மகளும் தரித்திரத்தின் சிகரத்தை எட்டிப் பிடித்தனர்.

நிலைமையை உணர்ந்த தயாநிதி நெருக்கினான்; கடனுக்குப் பதிலாக அவள் கற்பைச் சூறையாட விரும்பினான். ஏழை கீதா என்ன செய்வாள்? பிறந்த வீட்டை விட்டுப் பெற்ற தாயை விட்டுப் புகுந்த வீட்டைத் தேடிப் புருஷன் தயவை நாடி ஓடினாள், ஓடினாள், அப்படி ஓடினாள். அங்கே பிச்சைக்காரி யோடு பிச்சைக்காரியாய் நின்ற அவளை, அந்த வீட்டு மருமகள் என்று இனந்தெரிந்து கொண்டவள் ஒரே ஒருத்திதான் - அவள்தான் நிர்மலா

மலர்வதற்கு முன்னால் மணமற்றுப் போன அவளை நோக்கி, எங்கே மன்னி, என் கணவர்?’ என்று

ஆவலுடன் விசாரித்தாள் கீதா.

நீர் வழியும் கண்களுடன் நிர்மலா சொன்னாள். 'இப்பொழுது அவன் மனைவி நீயல்ல, கீதா -

சுமதி:

அவ்வளவுதான்! கீதாவின் தலையில் இடி விழ

வில்லை. இமயமலையே பெயர்ந்து வந்து விழுந்தது.