பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 55

1953ஆம் ஆண்டில் இரண்டாவது படமாக நடேஷ் ஆர்ட் பிக்சர்சின் 'அன்பு' என்ற படத்துக்கு, கதை -வசனம் எழுதியதோடு ஒரு பாடலையும் விந்தன் எழுதினார். அன்பு - சிவாஜி கணேசனுக்கு இரண்டாவது வெற்றிப்படம்.

தையல் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கித் திரைப்படத் தயாரிப்பாளராக முன்னேறியவர் எம். நடேசன்.

திரைப்பட நடிகைகள் டி.ஆர். ராஜகுமாரி, பத்மினி ஆகிய திரைப்பட நட்சத்திரங்களுக்குக் கவர்ச்சிகரமாக உடைகள் தைத்துக் கொடுத்து, பலரின் அன்புக்கு ஆளானவர். கையில் கொஞ்சம் பணம் சேர்ந்தவுடனே ஜோசப் தளியத், எப்.நாகூர் போன்றவர்களுடன் கூட்டுச் சேர்ந்து படங்கள் தயாரித்து, திரைத்துறையில் பலருக்கு அறிமுகமாகி அவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று 'அன்பு என்னும் படத்தைத் தயாரித்தார்.

விந்தனும் நடேசனும் சேத்துப்பட்டில் குடியிருந் தார்கள். அவர்களின் குடியிருப்பின் இடைவெளி சிறியதுதான்.