பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மு. பரமசிவம் :

அன்பு திரைப்படம் பெரிதும் வெற்றி பெற்றவுடன் நடேசன், அப்பொழுது 'கல்கி' அலுவலகம் இருந்த டாக்டர் குருசாமி முதலியார் தெருவில் பெரிய வீட்டைக் கட்டி அதற்கு 'அன்பு இல்லம்' என்று பெயர் சூட்டினார். தம் குடும்பத் திருமணம் ஒன்றிற்கு, திருமதி எம்.எஸ்.சுப்புலெட்சுமி இசைக்கச்சேரியை ஏற்பாடு செய்தார்.

விந்தனும் நடேசனும் சில காலம் நெருங்கிப் பழகினார்கள். அச்சமயத்தில் நடேசன் பேசினால், சிரித்தால் விந்தன் பேசுவது போலவும், சிரிப்பது போலவும் இருக்கும்.

அன்பு படத்தைத் தொடர்ந்து 'ஆசை என்ற படத்தை எடுத்தார். அதில் ஜெமினி கணேசன் நடித்தார். அந்தப் படத்திற்கு இளங்கோவன் வசனம் எழுதினார். அந்தப் படம் நடேசனின் ஆசையை நிராசையாக்கிவிட்டது.

மூன்றாவதாக எம்.ஜி.ஆர். நடிக்க 'என் கடமை' என்ற படத்தைத் தயாரித்தார். அதற்கு விந்தன் வசனம் எழுதினார். ஆனால் இடையில் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சினையால் விந்தன் விலகிக் கொண்டார்.

'என் கடமை என்ற படம் வெளிவந்தபோது, எம்.ஜி.ஆர். எம்.எல்.சி பதவியை இராஜிநாமா செய்தார். படமும் தியேட்டர்களிலிருந்து ராஜினாமா செய்து விட்டது!

நடேசன் என் கடமை படத்தில் அடைந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் எம்.ஜி.ஆர்.

மன்னாதி மன்னன் என்ற படத்தில் நடித்தார்.