பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மு. பரமசிவம் :

அன்பின் சக்தி அது!

கணவன்! அவனைப் பற்றித் தங்கள் கன்னிப் பருவத்திலே பெண்கள் காணும் கனவுகள் எத்தனை எத்தனையோ!

ஆனால் நனவிலே?

அதற்கு நேர் விரோதமாக வல்லவா அமைகிறது! அப்படி அமைந்தால் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளவேண்டியதுதானா? அதைத் தவிர வேறு வழியே இல்லையா?

உண்டு; நிச்சயம் உண்டு. உதாரணத்துக்கு தங்கத்தைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன். அவள் தன் அப்பாவின் ஸ்தானத்தில் இருக்க வேண்டிய பூரீமான் இராஜமாணிக்க முதலியாருக்கு மாலை யிட்டாள். அவருக்கு முன்பே இரண்டு குழந்தைகள். காலஞ்சென்ற முதல்மனைவி பெற்றெடுத்தவை. அவர்களில் மூத்தவள் லட்சுமி, இளையவன் செல்வம். இருவரும் குணத்தில் வட துருவமும் தென்துருவமும் போல!

அதிலும் லட்சுமி செய்யும் அட்டகாசங்களை அவள் அம்மா இருந்திருந்தால்கூட பொறுத்திருக்க is ss L-L-IT 67.

செல்வமோ விளையாட்டுப் பிள்ளை. அந்த விளையாட்டிலேயே அவன் மாலதி என்னும் காதலியைப் பிடித்து விடுகிறான். அந்தக் காதலுக்குக் குறுக்கே வந்து சேர்கிறான் திருமலை, அவனுடைய திருவிளையாட்டால் விளையும் தீமைகள்தாம் எத்தனை...!