பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மு. பரமசிவம் :

அமைந்தது ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ என்ற ஓரங்க நாடகம்.

மூலக்கதையைப் பிரதிபலிக்கும் வகையில் மனைவியின் மேல் கணவன் சந்தேகப்படும் காட்சியை சிவாஜி கணேசன் சிறப்பாக நடித்துக் காட்டினார். அனைத்துக்கும் மேலாக அன்பு படத்தில் விந்தன் எழுதியுள்ள சில பாடல்களை இன்றும் சினிமா ரசிகர்கள் பாடிக்கொண்டிருப்பது சிறப்பு அம்சமாகும்.

உதாரணத்துக்குச் சில பாடல் வரிகள் :

'சுத்தாத இடமில்லை கேட்காத பேரில்லே

சோத்துக்கு வழிகாட்ட ஆளில்லே

செத்தபின்பு சிவலோகம் செல்ல வழிகாட்டும்

பித்தர்கள் ஏனிந்த நாட்டிலே’’

என்று ஆவேசமாய்ப் பாடலை ஆரம்பிக்கிறார் விந்தன்.

பசியின் கொடுமை எத்தகையது என்பதைத் தமது சொந்த வாழ்க்கையில் அனுபவித்தவர் என்பதால் இயல்பான சிந்தனை வருகிறது இவருக்கு. மேலும் சில வரிகள் :

ஒண்ணும் புரியவில்லை தம்பி - எனக்கு ஒண்ணும் புரியவில்லை தம்பி. கண்ணு ரெண்டும் சுத்துது, காதை அடைக்குது கஞ்சி கஞ்சி என்று வயிறு கெஞ்சிக் கெஞ்சிக் கேட்குது.