பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●

  • திரை லகில் விந்தன் 63

வாழ்க்கை ஜீவனாக வேண்டும். ஆனால் அவளோ தங்கராஜின் வாழ்க்கை ஜீவனாக ஆகிவிட்டாள். இது முதல் சிக்கல்.

அந்த தங்கராஜனோ ஜீவாவின் ஆருயிர் நண்பனாக இருந்துவிட்டான். இது இரண்டாவது சிக்கல்!

அவனைக் கைபிடித்த மங்களாவுக்கோ முதற்கடவுள் கற்பு. இரண்டாவது கடவுள்தான் அவளைப் படைத்தவன். இது மூன்றாவது சிக்கல்:

இந்தச் சிக்கலுக்கிடையே அவள் தங்கராஜின் கூண்டுக்கிளியாகவாவது இருந்தாளா? அதுவும் இல்லை. கொஞ்சும் கிளியாக வேறு இருந்துவிட்டாள். இது நான்காவது சிக்கல்.

இந்த நான்கு சிக்கல்களோடு, விந்தனும் ராமண்ணாவும் எதிர்பாராத விதத்தில் ஐந்தாவது சிக்கலும் சேர்ந்து கொண்டது. அதுதான் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சேர்ந்து நடித்தது!

தமிழ்த் திரையில் இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்தது திருப்புமுனை என்று பத்திரிகைகள் பாராட்டினாலும் ரசிகர்களுக்கிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

மேலும், இரண்டு நடிகர்களும் இரு வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இதுவே சிக்கலுக்கு வலிமையைச் சேர்த்தது. இதன்மூலம் மாறுபட்ட அரசியல் கருத்துக்கு மதிப்பு தரும் பண்பை மறந்தனர் சினிமா ரசிகர்கள்.