பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

64 மு. பரமசிவம் :

"கூண்டுக்கிளி என்ற சிறந்தபடம் தமிழகத்தின் சகல பகுதி மக்களின் பார்வைக்குப் போகும் வாய்ப்பை இழந்தது. தயாரிப்பாளர் ராமண்ணாவும் அரசியல் கிளர்ச்சிகளுக்கு ஆளாகாமல் அ ைதியாக இருந்துவிட்டார்.

'அன்பு என்ற படத்தில் இருபத்து நான்கு வரியில் ஒரு நீண்ட பாடலை எழுதிப் புகழ்பெற்ற விந்தன், கூண்டுக்கிளியிலும் இரண்டு பாடல்களை எழுதி யுள்ளார். அதில் கொஞ்சுங்கிளியான பெண்ணை என்ற மிக நீண்ட பாடலும், பார் மகளே! பார்!’ என்ற பாடலும் அடங்கும்.

இன்றும் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்படும் பாடல்களில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

கொஞ்சுங் கிளியான பெண்ணைக் கூண்டுக்கிளி ஆக்கிவிட்டுக் கெட்டிமேளம் கொட்டுவது

சரியா? தப்பா?

என்று தொடங்கும் பாடல் வரிகளுடே வாழ்க்கையின் யதார்த்தங்களை வெளிப்படுத்துகிறார் விந்தன்.

தொடரும் பாடல் வரிகள்: தின்னப்பழம் தந்துவிட்டு

தின்னாதே என்று கையைத் தட்டிவிட்டுத்திட்டுவது

சரியா? தப்பா?