பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மு. பரமசிவம் :

8

தமிழ்த் திரை உலகில் மூன்று படங்களுக்கு வசனமும், சில பாடல்களும் எழுதிப் புகழ் பெற்ற விந்தனுக்குக் கையில் கொஞ்சம் பணம் சேர்ந்தது.

அச்சமயத்தில் விந்தன் குடியிருந்த சேத்துப்பட்டு கந்தப்பிள்ளை தெருவுக்குப் படகுக்கார்கள் பவனி வந்தன; சுற்றமும் நட்பும் சூழ வந்து நலன் விசாரித்தனர்; நகைமுகம் காட்டினர். எல்லோருக்கும் ஒரே சினிமா மயக்கம்தான்.

மேலும் பத்தாண்டுப் பத்திரிகை வாழ்க்கையில் விந்தன் காணாததையெல்லாம் கண்டார்; கேட்காததை யெல்லாம் கேட்டார்; கையில் பணம் புரண்டது; 'மனிதன் பிறந்தான்.

'மனிதன் பத்திரிகையில் விந்தன், தம் சினிமா அனுபவங்களை வெளிப்படுத்தும் வகையில், "தெரு விளக்கு என்னும் தொடரை எழுத ஆரம்பித்தார். அந்தத் தொடரைப் படித்த பலரும் பாராட்டினார்கள். ஆனால் சினிமாத்துறையினர் எரிச்சல் அடைந்தனர்.

அக்காலத்தில் சினிமா உலகில் புகழ் பெற்ற 'லேனா செட்டியார் அரசியல் துறையிலும் அதிகார வர்க்கத்திலும் உள்ளவர்களுக்கு நண்பராகவும், நாகரிக விருந்து படைப்பவராகவும் இருந்தவர்.