பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மு. பரமசிவம் :

அவ்வப்போது மீள்வதற்கு வேண்டிய பொருளாதார வசதியோ, மீட்பதற்கு நண்பர்களோ இல்லாததாலும் அதுவும் பிறந்த ஒராண்டு காலத்துக்குள்ளேயே பிரானனை விட்டுவிட்டது. இதனால் எனக்கு நேர்ந்த இழப்பு மிகப் பெரியதாகும்.

★ 女 女

'கல்கி'யில் விந்தன் எழுதிய கதைகளைப் படித்த பேராசிரியர் கல்கி, விந்தனைத் தனியாக அழைத்து. 'ஏம்பா! நம் பத்திரிகையைப் பெரும்பாலும் பெண்கள்தான் படிக்கிறாங்க. அதிலும் மாதத்திலே மூன்றுநாள் ஒதுங்கி யிருக்கிறார்களே, அவர்கள்தான் அதிகம் படிக்கிறாங்க. அவங்களுக்குப் போய் நீ புரட்சிகரமான கதையெல்லாம் எழுதுறியே' என்றாராம்.

அதை மனத்தில் வைத்துக் கொண்டு விந்தன், கண் திறக்குமா? நாவலில் எழுதுகிறார் :

'உமக்கு ஏதேனும் இலட்சியம் இருந்தால் அதை யெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு நடுத்தர வர்க்கத்துக்காகப் பத்திரிகை நடத்தும். ஆண்களுக்காகப் பத்திரிகை நடத்தாதீர்; பெண்களுக் காக நடத்தும்.

அவர்கள் மாதத்தில் மூன்று நாட்கள் வெளியில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால் அவர்கள் உம்முடைய பத்திரிகையை அவசியம் படிப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் இல்லாத காதல்கதைகளை