பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மு. பரமசிவம் :

சில மாதங்கள் வைத்திருந்து திருப்பி அனுப்பி விட்டார்கள் பணத்துடன்.

நான் முன்பே சொன்னபடி அக்காலத்தில் ஒரு படத்துக்குப் பலபேர் கதை - வசனம் எழுதுவார்கள். கடைசியில் புகழ்பெற்ற எழுத்தாளரின் பெயர் இடம் பெறும். இந்தக் கதை பண்ணும் கலாச்சாரத்துக்கு எத்தனையோ எழுத்தாளர்கள் பலியானது உண்டு. அதில் விந்தனும் ஒருவர்.

கல்கி பத்திரிகையில் பத்தாண்டு காலம் பணியாற்றிய விந்தன் வேறு பத்திரிகைகளுடன் தொடர்போ அதன் ஆசிரியருடன் நட்போ வைத்துக் கொண்டதில்லை. அவர் தொடர்பு வைத்திருந்த ஒரே பத்திரிகை 'பொன்னி. அதுவும் அப்பொழுது இல்லை.

அதைவிட சோதனை, பேராசிரியர் கல்கியும் அப்பொழுது இல்லை. அவர் இருந்திருந்தால் விந்தன் வாழ்க்கையே மாறியிருக்கும். அந்த அளவுக்கு விந்தனின் குணத்தையும் எழுத்தின் தன்மையையும் நன்கு அறிந்தவர்; வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவர் கல்கி.

இத்தகைய சூழலில் விந்தன் போன்ற எழுத்தாளர் களின் கதைகளை எவிமேட்டர் என்று ஒதுக்கிவிட்டு "லைட் மேட்டர் கதைகளை வெளியிட்டன பத்திரிகைகள்.

விந்தன் சினிமா மயக்கத்தில் சிறுகதை எழுதுவதை மறந்துவிட்டார்.