பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மு. பரமசிவம் :

1955இல் ஆர். ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி' படத்தில் ஒரு பாடலை விந்தன் எழுதினார். அப் பாடல்,

மயக்கும் மாலைப் பொழுதே நீ, போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா, வா இன்னலைத் தீர்க்க வா! என்று தொடங்கும். இப்பாடலை ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் இனிமையாகப் பாட எம்.ஜி.ஆரும், ஜி. வரலட்சுமியும் வாய் அசைக்கின்றனர்.

விந்தனின் இப் பாடலுக்கு இலக்கிய வாதி களிடையேயும், சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் பாராட்டுகள் கிடைத்தன. இப்பாடல் திரையிலும் ஒலிப்பதிவிலும் தஞ்சை இராமையாதாஸ் பெயரில் வெளிவந்தன.

திரை உலகில் அன்றும் இன்றும் புகழ்பெற்ற பல பாடல்கள் எழுதியவரின் பெயரால் வெளிவராமல் புகழ்பெற்ற கவிஞர்களின் பெயரால் வெளிவருவது வருத்தத்துக்குரியது.

1982 ஆம் ஆண்டு நான் விந்தனின் வாழ்க்கை வரலாற்றை எழுதஆரம்பித்தபோது ஏவி.எம்.மின்