பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 73

துணை நிறுவனமான எச்.எம்.வி.(ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ்) அதன் நிர்வாகி கண்ணன் என்பவரைச் சந்தித்து ஒலிப்பதிவில் விந்தன் பெயர் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் சம்மதித்தாரே தவிர, தவறு திருத்தப்படவில்லை. தொடர்ந்து வானொலியில் அந்தப் பாடலை எழுதியவர் தஞ்சை இராமையாதாஸ் என்றே அறிவிக்கப்படுகிறது.

1980க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில் 'பொம்மை இதழில் வைரமுத்து திரைப்பட லாசிரியர்கள் பற்றித் தொடர் கட்டுரை ஒன்று எழுதி வநதாா.

தஞ்சை இராமையாதாஸ் பற்றி எழுதும்போது, மயக்கும் மாலைப்பொழுதே நீ போ, போ!' என்னும் இலக்கியத் தரமான பாடல்களையும் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் 'பொம்மை இதழுக்குக் கடிதம் ஒன்று எழுதினேன். எனக்கு ஆதரவாக பெங்களூரில் இருந்து டி. எ. லலிதா என்பவரும் கடிதம் எழுதினார்.

'வானொலியில் கேட்டு, நான் பிழை செய்து விட்டேன், உண்மையில் மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! போ!' என்ற பாடலை எழுதியவர் விந்தன் தான் என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்!” என்று வைரமுத்து எனக்குக் கடிதம் எழுதினார். ஆனால் அந்தக் கடிதத்தைப் பத்திரிகைக்கு அனுப்பி உலகிற்குச் சொல்லத் தயங்கியது ஏன்?