பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மு. பரமசிவம் :

வைரமுத்து போன்ற திரைப்படத்துறைக் கவிஞர்களால் தான் இன்னும் அப்பாடல் தஞ்சை இராமையாதாஸ் என்னும் பெயராலேயே ஒலிபரப்பப் படுகிறது.

★ 大 ★

1954 முதல் 1958 வரையில் இந்த நான்கு ஆண்டுகளில் விந்தனின் சினிமா மயக்கம் தெளிய வில்லை. சில நண்பர்களைக் கூட்டு சேர்த்துக் கொண்டு 'மல்லிகா புரொடக்ஷன் என்ற பெயரில் சினிமா கம்பெனியை ஆரம்பித்து, சில பாடல்களைப் பதிவு செய்தார்.

படத்தில் நடிப்பதற்கு சிவாஜி கணேசனையும் பத்மினியையும் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் எதிர்பாராத வகையில் அந்த நடிகையும் நடிகரும் அமெரிக்காவுக்குப் போனதால், அத்துடன் விந்தனின் சினிமா கம்பெனி படுத்துவிட்டது.

சொந்தமாகப் பத்திரிகை, சினிமா கம்பெனி என்று ஆரம்பித்து தோல்வியும் பணம் நஷ்டமும் அடைந்தபோதும், விந்தன் சோர்ந்து போகாமல் ‘புத்தகப் பூங்கா என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்து, பிரபல சினிமா எழுத்தாளர் இளங்கோவன் (தினமணி மலர் 1936) எழுதிய சாவே வா! என்ற கட்டுரையைப் புத்தகமாக வெளியிட்டார்.

எல்லோரும் விந்தனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். எல்லோரும் எதை ஆரம்பித்தாலும்