பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 75

மங்களகரமாக இருக்கவேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் விந்தனோ முதன்முதலில் வெளியிட்ட புத்தகத்தின் தலைப்பை சாவே வா!' என்று அமங்கலமாகப் பெயர் வைத்திருக்கிறாரே என்று ஆச்சரியமடைந்தார்கள்; முகம் சுளித்தார்கள்.

முற்போக்குச் சிந்தனையாளரான விந்தன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தொடர்ந்து க.நா.சு., சாண்டில்யன் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டதோடு, ஜெயகாந்தன் எழுதிய சிறு கதைகளைத் தொகுத்து 'ஒரு பிடி சோறு' என்று வெளி யிட்டார். அந்தத் தொகுப்புதான் ஜெய காந்தனை ஆனந்த விகடனுக்கு அடையாளம் காடடியது.

சமீபத்தில் ஜெயகாந்தன் குமுதம் பத்திரிகையில், 'சகோதர எழுத்தாளர் விந்தன் தம் சொந்த செலவில் என் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். என்று பெருமையுடன் கூறுகிறார்.

இதன் மூலம் புத்தகப்பூங்காவில் பெரும்பணம் நஷ்டத்தைக் கண்டபோதிலும் விந்தன் எண்ணம் வெற்றி அடைந்த தென்று கருதலாம்.

女 大 ★