பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

  • திரையுலகில் விந்தன் 77

தோழிகள். பணக்கார வாலிபனும் மனோரமாவின் சகோதரனுமான குமார், தாயம் ஆடவரும் லலிதாவின் அழகில் மனத்தைப் பறி கொடுக்கிறான். குமாரும் லலிதாவும் பழகுவதைப் பொறாமைக் கண்ணோடு கண்ட சேகர் அவளைக் கண்டிக்கிறான்.

கடன் தொல்லையால் அல்லலுறும் குருசாமி முதலியாருக்குச் சமய சஞ்சீவி போல் உதவிபுரிகிறான் குமார். குமாரின் மீதுள்ள பொறாமை சேகர்லலிதாவிடம் மாறாத காதலுணர்ச்சி தோன்றக் காரணமாகிறது.

குமாருடன் லலிதா நெருங்கிப் பழகுவதைக் கண்டபோதுதான், தான் லலிதா மீது கொண்ட காதலை உணர்கிறான் சேகர்.

ஒரு நாள் குருசாமியின் மகள் சிறுமி அனுராதா பொம்மைக் கல்யாணத்திற்காக வைத்திருந்த மாலையை எடுத்து வேடிக்கையாக லலிதா சேகரின் கழுத்தில் போட்டுவிட, சேகரும் அதே மாலையை அவளுக்குத் திருப்பி அணிவிக்கிறான்.

ஒரு ஆசைக்குப் பெண் மாலை யிடுவதன் உண்மை அர்த்தத்தை உணர்ந்த லலிதா திடுக்கிட, சேகர், அவளிடம் அவர்களிருவரும் அன்றுதான் கணவன் மனைவி ஆகிவிட்டதையும், தாய், தந்தையரின் சம்மதம் பெற்று அவளை உலகமறிய மணப்பதாகக் கூறிவிட்டுக் கொடைக்கானல் சென்று விடுகிறான். லலிதாவும் அவனையே கணவனாக வரிக்கிறாள்.

குமாரின் உதவியால் குருசாமி முதலியார் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடப் பேராசையும்