பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மு. பரமசிவம் :

ஆனால் எல்லோருக்கும் வெற்றி கிட்டிவிடுவ தில்லை. துறையில் புகுந்து, ஓரிரு படங்களில் வாய்ப்பு பெற்றவர்கள்கூட தொடர்ந்து அங்கு நீடித்து நிற்க முடியாது போகிறது. அங்குள்ள சூழ்நிலை அப்படி, உண்மையான திறமையும் நேர்மையான உழைப்பும் உரியமுறையில் மதிக்கப்படுவதுமில்லை; கவுரவிக்கப்படுவதும் இல்லை.

அந்த உலகத்தில் நிலைபெற்று முன்னேறுவதற் கெனத் தனித்திறமைகளும் செயல்பாடுகளும் தேவைப்படுகின்றன. ஒருசிலர் சீக்கிரமே பெரும் கவனிப்புப் பெற்று, வெற்றிகரமாக வளர்ந்து தங்கள் விருப்பப்படி மற்றவர்களை ஆட்டுவிக்கக்கூடிய சக்தி பெற்று மிருக்கிறார்கள் அத்துறையில். அவர்கள் அபூர்வங்கள் - விதி விலக்குகள்.

பொதுவாக, சினிமா உலகிற்குப் போன இலக்கிய வாதிகள் ஆற்றல் நிறைந்த படைப்பாளிகள் - கசப்பான அனுபவங்களையே பெற நேர்ந்திருக் கிறது. அந்த வகையைச் சேர்ந்தவர்தான் எழுத்தாளர் விந்தன் அவர்களும். இதை அவருடைய திரை உலக அனுபவங்களும் போராட்டங்களும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன.

விந்தன் சுயசிந்தனையாளர். எழுத்தாற்றல் மிகுந்த படைப்பாளி. சமூகப் பார்வையோடும், மனித நேயத் தோடும், முற்போக்குச் சிந்தனையுடனும், அங்கதச் சுவையோடும், வாழ்க்கை யதார்த்தங்களை விவரிக்கும் சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்தவர். தேர்ந்த பத்திரிகையாளர். சொந்தமாக மனிதன்' என்ற பத்திரிகையை நடத்தியவர். தன்மானம் மிக்கவர்.