பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மு. பரமசிவம் :

அவர் கண்ட கனவு பொய்யாய்ப், புலம்பலாய்ப் போய்விட்டது.

அக்காலத்தில் சினிமாத் துறையில் புகழ்பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், நட்சத்திர நடிகைநடிகர்கள் ஆகியோரின் உதவியாலும் உழைப்பாலும் உருவான பார்த்திபன் கனவு தோல்வி அடைந்தது எப்படி? என்னே ரசிகர்களின் ரசனை?

ஜமீன் பரம்பரையில் வந்த கோவிந்தராஜன் பெரும் பணத்தைச் செலவழித்துத் தோல்வி கண்டு துவண்டு போனார். அடுத்து, சில படங்களைக் குறைந்த செலவில் எடுத்து மீண்டும் தோல்வி கண்டு மனம் உடைந்து மரணம் அடைந்தார். எனினும் பேராசிரியர் கல்கியின் பார்த்திபன் கனவு நாவலைத் திரைப்படமாகத் தயாரித்த பெருமை கோவிந்த ராஜனுக்கு உண்டு. இன்றும் அந்தப் படத்தின் சிறப்புகள் பேசப்படுகின்றன.

பேராசிரியர் கல்கி எழுதிய பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆகிய நாவல்களைப் படித்துப் பெரிதும் பாராட்டிய விந்தன், அந்த நாவல்களில் வரும் பாத்திரங்களை அற்புதமாகப் படைத்ததற்காகப் பேராசிரியர் கல்கிக்குச் சிலை அமைக்க வேண்டும் என்று 1946இல் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான 'முல்லைக்கொடியாள் என்ற புத்தகத்தின் பின்னுரையில் எழுதினார்.

இன்று தமிழகத்தின் எல்லா மக்களும் மூன்று தலைமுறைகளாகத் தொடர்ந்து படித்துக்கொண்டி ருக்கிறார்கள். கல்கியின் எழுத்துக்களை, அதன்மூலம்