பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 83

பொன்: அடி வள்ளி! பொண்ணு வாசனை ஆளையே

வள்:

இழுக்குதே. இன்னும் எத்தனை நாளைக்கு உன் கையால் கம்பு அடையும் கீரைக்குழம்பும் சாப்பிட எனக்குக் கொடுத்து வெச்சிருக்கோ, தெரியலே. ஒரு நாளைப்போல நீயும் இப்படித்தான் சொல்லி கிட்டிருக்கே. இன்னொரு தடவை அப்படிச் சொன்னே, இந்த அடுப்பை வெட்டிக் காவிரியில் போட்டுடுவேன்! ஆமாம்.

பொன்: விளையாட்டுக்குச் சொல்லலே வள்ளி!

நேத்து மகாராஜாவும் மகாராணியும் பேசிக் கிட்டிருந்ததைக் கேட்டேன். யுத்தம் வரத்தான் போகுதாம். வந்தா உனக்கென்னன்னு கேக்கிறேன்? உன்னை யாரு யுத்தத்துக்கு அழைக்கிறாங்க? உன் பாட்டுக்குப் படகோட்டிக்கிட்டிருக்க வேண்டியது தானே!

பொன்: அதுதான் இல்ல! மகாராஜா கால்லே விழுந்து

கேட்டுக்கப்போறேன், என்னையும் யுத்தத்துக்கு அழைச்சிகிட்டுப் போகச் சொல்லி...

வள்ளி; நானும் உன் கால்லே விழுந்து கேட்கப்

போறேன். என்னையும் யுத்தத்துக்கு அழைச்சுக் கிட்டுப் போகச் சொல்லி. உனக்கு அது பிடிக்க லேன்னா இப்படியாச்சம் செய். கல்யாணத்துக்கு முந்தி காவிரியாத்தோடு போனவளைக் கரை சேர்த்தே பாரு...