பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

©.

84 மு. பரமசிவம் :

மறுபடியும் அந்தக் காவேரியாத்திலே என்னைத் தள்ளிவிட்டுப் போய்விடு. இந்தச் சமயத்தில் குதிரை வரும் சத்தம் கேட்க, அதைக் கேட்டபடி வெளியே வருகிறான் பொன்னன். பல்லவத் தூதர்கள் செல்வதறிந்து வள்ளியுடன் உறையூருக்குக் கிளம்புகிறான்.

போ, வெளியே!

சோழ மண்டலாதிபதி பார்த்திப மகாராஜாவின்

முன் பல்லவத் தூதர்கள் நிற்கிறார்கள். பார் : யார் நீங்க? பல் : திரிலோகச் சக்கரவர்த்தி, காஞ்சி மண்ட

லாதிபதி, சத்துரு சம்ஹாரி, நரசிம்ம வர்ம பல்லவராயருடைய தூதன் நான்.

விதூஷகன் நிறுத்தும்! எந்தத் திரிலோகத்துச் சக்கரவர்த்தி? அதல சுதல பாதாளமா? அல்லது இந்திரலோக, சந்திரலோக, எம லோகமா?

துரத : அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது...! தங்கள் பாட்டனார் காலம் முதல் ஆண்டுதோறும் கட்டி வந்த கப்பத்தைச் சென்ற ஆறு ஆண்டுகளாகத் தாங்கள் கட்டவில்லையாம். அதற்கு முகாந்திரம் கேட்டு வரும்படி எங்கள் சக்கரவர்த்தியின் கட்டளை.

பார்: முகாந்திரமாம்... முகாந்திரம்! பாட்டனார் அடிமையாயிருந்ததற்காக, நானும் அடிமை யாக இருக்க வேண்டுமா? அடிமைத்தனம் என் பரம்பரை சொத்து அல்ல. தூதரே... உங்கள்