பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 87

மாரப்பன் ஏதோ ஆழ்ந்த யோசனையிலிருந்து

விடுபட்டுச் சோர்ந்த முகத்துடன் நிற்கிறான்.

A_f #fff:

Mos/s/.

பார் :

ւ0frr

பார்:

சுதந்திரம் நமது பிறப்புரிமை. அதைச் சோர்வின்றிக் காப்பது நமது கடமை. திணவெடுத்த தோள்களுக்கும் துருப்பிடித்த வாள்களுக்கும் வேலை வந்துவிட்டது. படை கிளம்பட்டும். பல்லவரின் ரத்தத்தால் சோழரின் அவமானம் துடைக்கப்படட்டும். மாரப்பா புறப்படு... வெற்றி அல்லது வீர சொர்க்கம்.

மன்னிக்க வேண்டும். தெரிந்து அடையப் போகும் தோல்வியைத் தெரியாமல் வீர சொர்க்கம் என்று நம்ப நான் தயாராயில்லை.

மாரப்பா... நீயா இப்படிச் சொல்கிறாய்?

ஆம்... அடிமையா யிருந்தாலும் அண்ணன்

அரசராயிருக்க வேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன். காவேரியிலிருந்து கோதாவரி வரை பரந்து கிடக்கும் பல்லவ சாம்ராஜ்யம் எங்கே? கையகலமுள்ள சோழ நாடு எங்கே?

ஆ என்ன தைரியம் உனக்கு? எனக்கு முன்னால் நம் தாய்நாட்டையா பழிக்கிறாய? உன்னைப் போன்ற சேனாதிபதி எனக்குத் தேவை யில்லை. போ. உடனே போய்விடு. இன்றி லிருந்து நானே இந்நாட்டின் சேனாபதி, போ... போய்விடு உடனே! என் கண் முன் நில்லாதே.

வாளை உருவ மாரப்பபூபதி வாளைக் கழற்றி

வைத்துவிட்டு வெளியேறுகிறான்.